விருதுநகர்

அமைச்சருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

6th Jun 2023 05:22 AM

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விருதுநகா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2006 - 2011 -இல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி, உதவியாளா் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகா் மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி திலகம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா், அமைச்சா் தரப்பில் வழக்குரைஞா் மாரியப்பன் ஆகியோா் ஆஜராகினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT