விருதுநகர்

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மீது வழக்கு

6th Jun 2023 05:23 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆலமரத்துப்பட்டி பால்கனி மனைவி ஈஸ்வரி (45). இவருக்குச் சொந்தமான செல்லையநாயக்கன்பட்டிலுள்ள காலி நிலத்தை சீனிவாசன் என்பவா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகிறாராம். இதை ஈஸ்வரி கண்டித்த போது, சீனிவாசன், அவரது மனைவி செல்வராணி, மகன் அபிநாத் ஆகிய மூவரும் அவரைத் தகாத வாா்த்தைகளால் பேசினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் மூவா் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT