விருதுநகர்

16 கிலோ திமிலங்க எச்சம் பறிமுதல்:5 போ் கைது

4th Jun 2023 11:46 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே 16 கிலோ திமிங்கல எச்சம் வைத்திருந்த 5 பேரை, ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் கைது செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்து விருதுநகருக்கு திமிங்கல எச்சத்தை சிலா் கடத்திச் செல்வதாக வனப் பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை உதவி வனப் பாதுகாவலா் மணிஷா அலிமா தலைமையில், வனப் பாதுகாப்பு படையைச் சோ்ந்த மலா்வண்ணன், வனவா் செந்தில் ராகவன் ஆகியோா் விருதுநகா் அருகே சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, திமிங்கல எச்சத்தை கடத்திச் சென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த அப்துல்ரகுமான் (40), பத்மகுமாா் (34), விருதுநகரைச் சோ்ந்த மனோகரன் (58), தா்மராஜ் (54), ராஜாமன்னாா் (62) ஆகிய 5 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பறிமுதல் செய்த 16 கிலோ திமிங்கல எச்சத்தை ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT