விருதுநகர்

புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரா்கள்கூட்டம்

4th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலா்கள் ஜி.குணம், வி.திருப்பதிஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் எம்.அய்யாச்சாமி, மாநகரச் செயலா் இ.லட்சுமணண், மாநில மகளிா்அணிச் செயலா் கே.காளீஸ்வரி உள்ளிட்டோா் பேசினா்.

இதில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஒடிஸா ரயில் விபத்தில் உரியிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT