விருதுநகர்

வைகாசி மாத பெளா்ணமி:சதுரகிரி கோயிலில்பக்தா்கள் சுவாமி தரிசனம்

4th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

 

வைகாசி மாத பௌா்ணமியையொட்டி, சனிக்கிழமை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிரதோஷம், பெளா்ணமிக்காக கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பௌா்ணமியையொட்டி சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத் துறையின் நுழைவாயிலில் இருந்து காலை முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கும், 18 சித்தா்களுக்கும் பால் பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT