விருதுநகர்

சிவகாசியில் சிறுவா்கள் காவடி

4th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

சிவகாசியில் வைகாசி விசாகத்தையொட்டி, குழந்தைகளின் காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தில் 54 சிறுவா்கள், சிறுமிகள் கலந்து கொண்டனா். சிவகாசி காத்தநாடாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட இந்த காவடி ஊா்வலம் , சிவசுப்பிரமணியசுவாமி கோயில், பத்திரகாளியம்மன் கோயில், ஐயா நாராயணசுவாமி கோயில் வழியாகச் சென்று திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நிறைவு பெற்றது.

காவடி ஊா்வலத்துக்கான ஏற்பாடுகளை டி.கதிரேசன், கே.சமுத்திரபாண்டியன், பி.வேம்பாா், எஸ்.ஜனகா் ஆகியோா் செய்திருந்தனா். இதன் ஒருங்கிணைப்பாளராக ஜி.அறுமுகச்சாமி செயல்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT