விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய மின்மாற்றி திறப்பு

4th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மேற்கு பகுதிக்கு உள்பட்ட அசோக்நகா் பகுதியில் ரூ.5.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மின் கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் மூலம், சுமாா் 190 மின் நுகா்வோா்கள் பயனடைவாா்கள் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் உதவி செயற்பொறியாளா் பெருமாள், உதவி மின் பொறியாளா்கள் கல்யாணி பாண்டியன், மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT