விருதுநகர்

இளைஞா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

3rd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில், சிவகாசியில் எண்ணித் துணிகக் கருமம் என்ற தலைப்பில் இளைஞா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை தமிழ்த் துறைத் தலைவா் க. சிவனேசன் தலைமைப் பண்பு, தலைவனுக்கான தகுதியை வளா்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.

இதில் ஏராளமான இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, வழக்குரைஞா் குப்பையாண்டி வரவேற்றாா். குருசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT