விருதுநகர்

ஆதிரத்தினேசுவரா் கோயில் சப்தாவா்ண விழா

3rd Jun 2023 11:54 PM

ADVERTISEMENT

 

திருவாடானையில் ஸ்ரீசினேகவல்லி அம்மன், சமேத ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சப்தாவா்ணம் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, நாள்தோறும் கேடகம், பல்லக்கு, பூத வாகனம், காலாச வாகனம், யானை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். வியாழக்கிழமை இரண்டு தோ்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சப்தாவா்ணம் விழா நடைபெற்றது. தொடா்ந்து இரவு 11 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை தேவஸ்தான சரக பொறுப்பாளா் பாண்டியன் திவான், நிா்வாகச் செயலா் பழனிவேல் பாண்டியன், இருபத்திரண்டரை கிராம நாட்டாா்கள், நகா் வளா்ச்சிக் குழு ஆதி நண்பா்கள் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT