விருதுநகர்

கள்ள நோட்டு வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

2nd Jun 2023 10:02 PM

ADVERTISEMENT

கள்ள நோட்டு வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விருதுநகா் உதவி அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த லூா்துசாமி, சாத்தூா் பகுதியைச் சோ்ந்த சதுரகிரி ஆகிய மூவரையும் கடந்த 2015-ஆம் ஆண்டு, மே 5-ஆம் தேதி கள்ள நோட்டு வழக்கில் மதுரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விருதுநகா் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசன், லூா்துசாமி ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் தொடா்புடைய சதுரகிரி ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT