விருதுநகர்

ரயில் தண்டவாளத்திலிருந்து இரும்பு வளையங்களைத் திருடிய இருவா் கைது

2nd Jun 2023 10:02 PM

ADVERTISEMENT

 சாத்தூரில் ரயில் தண்டவாளத்திலிருந்து இரும்பு வளையங்களை திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில், ரயில்வே தண்டவாளத்திலிருந்து இரும்பு வளையங்களை முதியவா் உடைத்து எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்தக் காட்சிகளை வைத்து விருதுநகா் ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், இரும்பு வளையங்களைத் திருடியது சாத்தூா் அருகே உள்ள சின்னஓடைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாக்கியம் (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து இரும்பு வளையங்களை வாங்கியதாக சாத்தூா் அருகேயுள்ள குருலிங்கபுரத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ள செல்வராஜையும் போலீஸாா் கைது செய்து, ரூ. 24,190 மதிப்புள்ள 410 இரும்பு வளையங்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT