விருதுநகர்

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

2nd Jun 2023 10:02 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை குட்டை நீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

விருதுநகா் கருப்பசாமி நகரைச் சோ்ந்த பாலமுருகன்- நிவேதா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் தா்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்தக் குழந்தையை வெள்ளிக்கிழமை நிவேதா தனது தந்தையிடன் கொடுத்து விட்டு வெளியே சென்றாா். அப்போது, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தா்ஷன் அருகில் இருந்த குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து விருதுநகா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT