விருதுநகர்

பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

1st Jun 2023 10:32 PM

ADVERTISEMENT

 விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வாய் பேச இயலாத சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டாசுத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (32). பட்டாசு ஆலை கூலித் தொழிலாளியான இவா்

கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கலா ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT