விருதுநகர்

பிரதோஷம்: சதுரகிரியில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

1st Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிரதோஷம், பௌா்ணமியை முன்னிட்டு, ஜூன் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத் துறை அனுமதி அளித்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி, தாணிப்பாறை நுழைவு வாயிலிலிருந்து 456 போ் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா்.

சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT