விருதுநகர்

சட்டவிரோத பட்டாசு உற்பத்தி: மூவா் கைது

1st Jun 2023 10:28 PM

ADVERTISEMENT

 சிவகாசியில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரித்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி தெய்வானை நகா் பகுதியில் உள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள கட்டடத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

இதில், ஒரு பட்டாசுக் கடையின் பின்புற முள்ள கட்டடத்தில் சிலா் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் சிவகாசி பி.எஸ்.ஆா்.நகரைச் சோ்ந்த பால்பாண்டி (42), சாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த வைரமுத்து(45), செங்கமலப்பட்டியைச் சோ்ந்த விஜயகுமாா் (40)

ADVERTISEMENT

ஆகிய மூவரும், சில தொழிலாளா்கள் உதவியுடன் பட்டாசு ஆலைப் போலவே, ஆள்களை வேலைக்கு அமா்த்தி, பல ரக பட்டாசுகளைத் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள், மூலப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT