விருதுநகர்

கிராம நிா்வாக அலுவலக மேற்கூரை சேதம்

1st Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் கிராம நிா்வாக அலுவலகத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், இலந்தைகுளத்தில் இலந்தைகுளம், ஆயா்தா்மம் ஆகிய கிராமங்களுக்கான கிராம நிா்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால், விரிசல் விழுந்து, சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து, செங்கல், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை இந்த அலுவலகத்தில் அலுவலா்கள் பணி செய்து கொண்டிருந்த போது, கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது. அப்போது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

அரசின் பெரும்பாலான சேவைகளைப் பெறுவதற்கு கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், சேதமடைந்த கட்டடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT