விருதுநகர்

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

1st Jun 2023 01:41 AM

ADVERTISEMENT

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை 19- ஆவது வாா்டு பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த வாா்டு உறுப்பினரான பாஜகவைச் சோ்ந்த இ. மகேஷ்வரி தனது வாா்டுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதி செய்து தரக் கோரிக்கை விடுத்து வந்தாா். ஆனால் எந்த வசதியும் செய்து தரப்படாததையடுத்து அவா் அந்த வாா்டு பொதுமக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். இதில் மாமன்ற பாஜக உறுப்பினா் பாஸ்கரனும் கலந்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் என். சங்கரன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா் விரைவில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT