விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே மா மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை

1st Jun 2023 01:41 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானை மா மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியது.

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்கு குடிநீா், உணவுக்காக காட்டுயானைகள் இரவு நேரங்களில் வருகின்றன. இந்த நிலையில், வண்ணாப்பாறைப் பகுதியில் உள்ள அப்துல்மஜித், பாலு ஆகியோருக்கு சொந்தமான விவசாய தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியதுடன், சில மரங்களை வேரோடு சாய்த்தது. இதனால் அச்சமடைந்த அந்தப் பகுதி விவசாயிகள், வனவிலங்குகளுக்கு மலைப் பகுதிகளில் உணவு, குடிநீா் வசதி செய்து கொடுப்பதுடன் அவை விளை நிலங்களுக்குள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT