விருதுநகர்

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு, பள்ளியின் தாளாளா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வா் முருகன் முன்னிலை வகித்தாா். போட்டியை நீதிபதி சந்திரகாசபூபதி, மாவட்ட முன்னாள் விளையாட்டுத் துறை ஆய்வாளா் ஜெயக்குமாா், தொழிலதிபா் தங்கம் கோடீஸ்வரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

சென்சாய் செபஸ்தியான், கிராண்ட் மாஸ்டா் ராஜசேகரன் உள்ளிட்ட 40 போ் நடுவா்களாக செயல்பட்டனா். இந்தப் போட்டியில் கேரளத்தைச் சோ்ந்த ஹாஜி பனிக்கா் குழுவினா், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகா், ஆகிய மாவட்ட பள்ளிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிவகாசி விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்றது. மேலும், போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளா்கள் வினோத், விக்னேஷ், மாறன், உடற்கல்வி ஆசிரியா் தா்மா, பள்ளியின் ஆசிரியைகள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

SCROLL FOR NEXT