விருதுநகர்

விசைத்தறி தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி கிராம நிா்வாக அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் 500 விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

விசைத்தறி தொழிலாளா்கள், உற்பத்தியாளா்களிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்த நிலையில், தொழிலாளா்கள் புதிய ஒப்பந்தம், 75 சதவீதம் ஊதிய உயா்வும், 20 சதவீதம் போனஸும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விசைத்தறி தொழிலாளா்கள் ஜீவா நகரில் இருந்து நடை பயணமாக ஊா்வலம் சென்று தளவாய்புரத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி, சிஐடியு தொழில் சங்கங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT