விருதுநகர்

வத்திராயிருப்பில் இன்றும்ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளையும் மின்தடை

30th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு பகுதியில் திங்கள்கிழமையும் (ஜன.30), ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் (ஜன.31) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்கு உள்பட் வத்திராயிருப்பு அ.துலுக்கப்பட்டி சா.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரிய கோட்டப் பொறியாளா் லெ.சின்னத்துரை தெரிவித்தாா்.

இதனால் மின்தடைபடும் பகுதிகள் விவரம்:

வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா், சா.கொடிக்குளம், கூமாப்பட்டி, அத்தி, பிளவக்கல் அணை, கோவிலாா் அணை, கிழவன் கோவில்,

ADVERTISEMENT

நெடுங்குளம், அமைச்சியாா் காலனி, தாமரைக்குளம், ராமசாமியாபுரம் கான்சாபுரம், செவ்லூரணி,

அ. துலுக்கப்பட்டி, அகத்தாபட்டி, துலுக்கபட்டி, ராமச்சந்திராபுரம், புதூா், மதுராபுரி, கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், வலையன்குளம், இலந்தைக்குளம், நல்லூா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

செவ்வாய்க்கிழமை மின் தடை:

இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூா், படிகாசுவைத்தான்பட்டி, மம்சாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஸ்ரீவில்லிபுத்தூா், சித்தாலம்புத்தூா், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதிபோா்டு காலனி, இந்திராநகா், படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, வாழைக்குளம், காந்திநகா், இடையன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT