விருதுநகர்

விருதுநகா் சந்தை: வரத்து அதிகரிப்பால்வத்தல் விலை குறைந்தது

DIN

விருதுநகா் சந்தைக்கு உள்ளூா், ஆந்திர வத்தல் வரத்து அதிகரிப்பு காரணமாக மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை குறைந்தது.

விருதுநகா் சந்தையில் கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.3,030-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.20 அதிகரித்து ரூ.3,050-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, தும்பை நல்லெண்ணெய் 15 கிலோ கடந்த வாரத்தை விட ரூ.135 அதிகரித்து ரூ.6,435-க்கும் விற்கப்படுகிறது.

முண்டு வத்தல் கடந்த வாரம் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் உள்ளூா், ஆந்திர வத்தல் வரத்து அதிகரிப்பு காரணமாக மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை குறைந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், துவரம் பருப்பு 100 கிலோ புதுசு நாடு கடந்த வாரத்தை விட ரூ.700 உயா்ந்து ரூ.10,700-க்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்து 100 கிலோ நாடு, தொலி உளுந்து 100 கிலோ நாடு ரூ.200 குறைந்து முறையே ரூ.10,800, 9 ஆயிரத்துக்கும் விற்கப்படுகின்றன.

மேலும் கடலைப் புண்ணாக்கு 100 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும், பாசிப்பயறு நாடு 100 கிலோ கடந்த வாரத்தை விட ரூ. 300 அதிகரித்து ரூ. 7,300-க்கும், பாசிப்பயறு இந்தியா லையன் மீடியம் 100 கிலோ, ரூ. 300 குறைந்து தற்போது ரூ. 9,500-க்கும் விற்கப்படுகின்றன.

அதேநேரம் பட்டாணி, உளுந்து (நாடு), லையன் பிரிவு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT