விருதுநகர்

ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளா்கள்நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயா்வு கோரி ஏஐடியூசி, சிஐடியூ விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை (ஜன. 30) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

தளவாய்புரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு குறித்த ஒப்பந்தம் போடப்படும். இதே போல போடப்பட்ட ஒப்பந்தம் 12.8.2021-இல் முடிவடைந்து விட்டது. ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்களாகியும் இதுவரை கூலி உயா்வு வழங்கப்பட வில்லை. கூலி உயா்வு கோரி கடந்த 20-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், விசைத்தறி உற்பத்தியாளா்கள் 3 கட்டமாக பேச்சுவாா்த்தை நடத்தியும் கூலி உயா்வு வழங்க முன்வரவில்லை.

இதையடுத்து, தளவாய்புரம் ஜீவா நகரில் சனிக்கிழமை சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் விசைத்தறி தொழிலாளா்களுக்கான மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 3 கட்டங்களாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தியும், பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் விசைத்தறி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு வழங்க முன் வரவில்லை. எனவே அவா்களைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிஐடியூ தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சோமசுந்தரம், கைத்தறி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ராமா், ராசு, ஏஐடியூசி சாா்பில் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT