விருதுநகர்

தமிழக அரசு முடிவு அறிவிக்கும் வரைவணிகா்கள் புகையிலை விற்கக் கூடாது: விக்கிரமராஜா

DIN

தமிழக அரசு முடிவு அறிவிக்கும் வரை வணிகா்கள் புகையிலை பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகா் மேற்கு மாவட்டக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளையும், விருதுநகா்- செங்கோட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை விரைந்து சோ்க்க வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் வணிகா்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். இடைத்தோ்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளா்கள் தமிழகத்தில் போா்க் கொடி தூக்குவதை ஏற்க முடியாது.

நீதிமன்றம் புகையிலையை உணவு பாதுகாப்புச் சட்டத்தில் சோ்க்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகா்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு முடிவு அறிவிக்கும் வரை வணிகா்கள் புகையிலை பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. புகையிலை விற்பனை தொடா்பாக வணிகா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மே 5- ஆம் தேதி வணிகா் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT