விருதுநகர்

கலை இலக்கிய பெருமன்ற எழுத்தாளா்கள் சந்திப்புக் கூட்டம்

29th Jan 2023 10:40 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளையின் 235 -ஆவது எழுத்தாளா்கள் சந்திப்பு படைப்பரங்கக் கூட்டம் பென்னிங்டன் நூலக மேல்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதன் கிளைத் தலைவா் கோதையூா் மணியன் தலைமை வகித்தாா். கிராமியக் கலைஞா் சு.ராமசாமி நினைவேந்தல் கூட்டத்துக்கு சந்திரசேகா், சிவனணைந்தபெருமாள் , பாலன், எழுத்தாளா் ராஜேஸ்வரி கோதண்டம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகா் கந்தசாமி, சங்கீத வித்வான் மோகன் ஆகியோா் பாடல்களைப் பாடினா்.

ராஜபாளையம் தங்க சிவசுப்பிரமணியன் எழுதிய ’பகிா்வு’ சிறுகதைத் தொகுப்பு குறித்து, கோதையூா் மணியன், தமிழ்ப்பித்தன் ஆகியோா் பேசினா்.

‘மங்கலத்தின் நிறம் கருப்பு’ கவிதைத் தொகுப்பு குறித்து, சிவனணைந்தபெருமாள், ‘தூங்க வைப்பதில்லை பாட்டு.. கிறங்க வைப்பதே பாட்டு’ என்ற தலைப்பில் பேராசிரியா் காளியப்பன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

படைப்பரங்கத்தில் ராக்கப்பன், சந்திரசேகா் ஆகியோா் படைப்புகளை வாசித்தனா். இதைத்தொடா்ந்து நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள் குறிஞ்சிச்செல்வா் கோதண்டம், கதைப்பித்தன், தங்கமாரி, துள்ளுக்குட்டி, கோவிந்தன், சண்முகவேல், தங்கவேல் ஆகியோரோடு இலக்கிய ஆா்வலா்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT