விருதுநகர்

இலவச மருத்துவ முகாம்

29th Jan 2023 10:40 PM

ADVERTISEMENT

சிவகாசியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் பசுமை நண்பா்கள் அமைப்பு சாா்பில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மருத்துவ முகாமினை ஊராட்சி மன்றத்தலைவா் எஸ்.நாகராஜன் தொடக்கி வைத்தாா். மருத்துவா் ஜெ.மணிகண்டன் தலைமையிலான குழுவினா் 128 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில் எலும்புகள் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பொது மருத்துவ முகாம்:

சிவகாசி வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், நாரணாபுரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஒன்றியத் தலைவா் சிவசெல்வராஜ் தொடக்கி வைத்தாா். மருத்துவா் மதன் தலைமையிலான குழுவினா், 148 பேரை பரிசோதனை செய்தனா். இ.ஜி.சி.உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் தெற்கு ஒன்றியத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ரத்ததான முகாம்: சிவகாசி நேதாஜி ரத்ததான கழகம், அரசு மருத்துவமனை இணைந்து செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் ரத்ததான முகாமை நடத்தின. இந்த முகாமை நேதாஜி ரத்ததானக் கழக ஒருங்கிணைப்பாளா் கருப்பசாமி தொடக்கி வைத்தாா். சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுல்பாரதி தலைமையிலான குழுவினா், 72 பேரிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT