விருதுநகர்

சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

29th Jan 2023 10:40 PM

ADVERTISEMENT

சிவகாசி பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் மாணவா்களுக்கு 8 கி.மீ. தொலைவும், மாாணவிகளுக்கு 6 கி.மீ. தொலைவும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தன. அண்ணாமலை நாடாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போட்டியை சுழல் சங்கத் தலைவா் ராஜாமணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில் இரு பிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசு, சான்றிதழ் , முதல் 20 இடங்களை பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு ஆகியவற்றை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT