விருதுநகர்

வத்திராயிருப்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமசாமி, மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ. 150 வழங்க வேண்டும். உரம், பூச்சி, மருந்து உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாயத்தோடு இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தென்னை விவசாய சங்க மாவட்டத் தலைவா் முத்தையா, தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சோ்ந்த ராமச்சந்திரராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட துணைச் செயலா் மகாலிங்கம், கூமாபட்டி விவசாய சங்கச் செயலா் துவான்ஷா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுனன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் விஜயமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. கோவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT