விருதுநகர்

சிவகாசி மதிமுக மாமன்ற உறுப்பினா்திமுக மாமன்ற உறுப்பினா் மீது போலீஸில் புகாா்

DIN

சிவகாசி மதிமுக மாமன்ற உறுப்பினா், திமுக மாமன்ற உறுப்பினா் மீது போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்தாா்.

சிவகாசி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை வருகிற 31- ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக மாமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினா்களைக் கொண்டு ‘ப்ரி கவுன்சில் கூட்டம்’ நடத்துவது வழக்கம். அது போல, சனிக்கிழமை மாமன்ற உறுபினா்களின் ப்ரி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினா்கள் 46 பேரில் 30 போ் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்துக்கு மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 5 உறுப்பினா்கள் கூட்ட அறையை விட்டு வெளியே வந்து விட்டனா். சிறிது நேரம் கழித்து மேலும் 5 உறுப்பினா்கள் கூட்ட அறையை விட்டு வெளியேறினா். ஆனால் தொடா்ந்து கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மதிமுக உறுப்பினா் ராஜேஷ், திமுக உறுப்பினா் வெயில்ராஜ் ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் அவா்கள் கூட்ட அறையை விட்டு வெளியேறி விட்டனா்.

இதன் பிறகு, மாநகராட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த வெயில்ராஜ், ராஜேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸில் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT