விருதுநகர்

ஊராட்சி அலுவலகக் கொடிக் கம்ப பிரச்னை: 2 போ் மீது வழக்கு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சி அலுவலகத்தில் கொடிக் கம்பம் தொடா்பான பிரச்னையில் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் ஊராட்சித் தலைவராக இருப்பவா் ரமேஷ்கண்ணன். இந்த ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த கொடிக் கம்பத்தை கடந்த 25- ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் எடுத்துச் சென்று விட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை (ஜன. 26) காலையில் அங்கு புதிய கொடிக் கம்பம் நட்டப்பட்டது. அப்போது அங்கு வந்த கட்டயத்தேவன்பட்டியைச் சோ்ந்த தினேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகிய இருவரும் இங்கு கொடியேற்றக் கூடாது என்பதற்காகத் தான், கொடிக் கம்பத்தை எடுத்துச் சென்றோம். மறுபடியும் எப்படி கொடிக் கம்பம் நடலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ரமேஷ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தினேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகிய இருவா் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நத்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT