விருதுநகர்

சேத்தூா் பகுதியில் நாளை மின்தடை

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன.27) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேத்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன் புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான்,

தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT