விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அசோக், ஆணையாளா் இளவரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு உறுப்பினா்கள் அனைவரும் வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தக் கூட்டத்தில், 24 வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டு பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.