விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ரூ4.49 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் ரூ.4.49 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டித் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியா் கல்யாணக்குமாா், வட்டாட்சியா் அறிவழகன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் பாபு, நகரச் செயலாளா் ஏ.கே.மணி, ஒன்றியச் செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜோதிராமலிங்கம், மணிமுருகன், யாசீா் அகமது, டுவிங்கிள் ஞானப்பிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT