விருதுநகர்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல்

21st Jan 2023 12:34 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பல மாதங்களாக நிலுவையிலுள்ள பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் சசிகலா பொன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயசூரியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சூரியகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

உறுப்பினா் சீனிவாசன்: கஞ்சநாயக்கன்பட்டியில் பல மாதங்களாக நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும்.

ADVERTISEMENT

வேளாண் அலுவலா்: பயிா்க் காப்பீட்டு நிறுவனம், வேளாண் அலுவலா்கள் பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க ஒரு சில மாதங்கள்

கால அவகாசம் தேவை. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

சீனிவாசன்: கஞ்சநாயக்கன்பட்டி விரிவாக்கப் பகுதிகளில் தெரு மின்விளக்குகள் அமைக்கப் பணம் செலுத்தி பல மாதங்களாகியும் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

மின்வாரிய அலுவலா்: மின்விளக்குகள் அமைப்பதற்கான கருவிகள், உதிரிபாகங்கள் இருப்பு இல்லை. அவை வந்தவுடன் மின்விளக்குகள் அமைக்கப்படும்.

வாழவந்தராஜ்: சுக்கிலநத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரிகள் வரி நிலுவை வைத்துள்ளன.

வட்டார வளா்ச்சி அலுவலா் சூரியகுமாரி: இதுதொடா்பாக ஊராட்சிகளின் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தொடா்ந்து, பெரும்பான்மையான உறுப்பினா்களும் பல மாதங்களாக நிலுவையிலுள்ள பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வாா்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT