திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை உணவகத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தங்கல் கே.கே. நகரைச் சோ்ந்த வாழவந்தான் மகன் கோட்டைராஜ் (27). உணவகத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கினாராம். வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ளவா்கள் எழுந்து பாா்த்த போது, கோட்டை ராஜ், வீட்டுமாடிப் படிக்குச் செல்லும் வழியில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.