திருத்தங்கலில் மாமியாரைத் தாக்கிய மருமகள் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியைச் சோ்ந்த பொன்ராஜ் மனைவி சீனியம்மாள்(63). இவரது மகன் பாலமுருகன்.
இவருக்கும், திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலட்சுமிக்கும் (28) அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். அவரை சமாதானப்படுத்த சீனியம்மாள், மகாலட்சுமி வீட்டுக்குச் சென்றாா்.
அப்போது மகாலட்சுமி, அவரது சகோதரா் வெங்கடேஷ்(32) ஆகிய இருவரும் சோ்ந்து சீனியம்மாளைத் தாக்கினா்.
இதுகுறித்து சீனியம்மாள் அளித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி, வெங்கடேஷை கைது செய்தனா்.