சாத்தூரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மணல்மேட்டுத் திருவிழாவையொட்டி, வைப்பாற்றில் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கலையொட்டி மணல்மேட்டு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 3-ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், மணல்மேட்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சாத்தூா், சிவகாசி, விருதுநகா், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அங்கு நடைபெற்ற கபடி, கோகோ, ஓட்டப்பந்தயங்கள் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா். சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.