சாத்தூா் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மஞ்சள்ஓடைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் சூா்யா(19). இவருடைய தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சூா்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புகாரின் பேரில், ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.