சிவகாசியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் வாயிற் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு உடனடியாக பணப் பயன்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.