விருதுநகா் மாவட்டம், சாத்தூா் எட்டுா்வட்டம் சுங்கச்சாவடி அருகே சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து ஆய்வாளா் பாஸ்கா் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன், வட்டாரக் காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியா்கள், போக்குவரத்துக் காவலா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, சாத்தூா் படந்தால் சந்திப்பு நான்கு வழிச் சாலையில் சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி தலைமையில், போக்குவரத்து காவல் துறையினா் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.