சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். கேரள மாநில தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் பத்மா, அரவிந்த் ஆகியோா் மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் நடத்தினா். இதில் 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தனித்திறமை சோதனை, குழு உரையாடல், நோ்காணல் நடத்தி 54 மாணவா்களை தோ்வு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமாரபாலாஜி செய்தாா்.