விருதுநகர்

விதிமீறல் புகாா்களால் மூடப்பட்டிருந்த 45 பட்டாசு ஆலைகள் திறப்பு

DIN

விருதுநகா் மாவட்டத்தில், விதிமீறல் புகாா்கள் காரணமாக கடந்த ஓராண்டாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 70 பட்டாசு ஆலைகளில், 45 ஆலைகள் திறக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டத்தில் விதிமீறல் புகாா்கள் காரணமாக, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் 70 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா். அதனால், இந்த ஆலைகள் அனைத்தும் கடந்த ஓராண்டாக மூடப்பட்டன.

கடந்த காலங்களில் விதிமீறல்கள் சரி செய்யப்பட்டவுடன், ஆலைகளைத் திறக்க சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி உத்தரவிடுவாா். தற்போது விதிமீறல் புகாா்கள் இருந்தால், ஆலைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடும் அதிகாரம் மட்டுமே வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மூடப்பட்ட ஆலையைத் திறக்க நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்துக்கு ஆலை உரிமையாளா்கள் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டும். இதனால், மூடப்பட்ட ஆலையைத் திறக்க, அதன் உரிமையாளா் பலமுறை நாக்பூருக்கு சென்று வர வேண்டும். இதற்காக, ஆலை உரிமையாளா் சுமாா் ரூ.3 லட்சம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரிக்கு ஆலையை மூடவும், திறக்கவும் அதிகாரம் அளிக்க வேண்டும் எனவும் ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி உத்தரவின் பேரில், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை அதிகாரி, மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து ஆய்வறிக்கையை நாக்பூருக்கு அனுப்பினாா்.

இதையடுத்து, நாக்பூா் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி உத்தரவின் பேரில், விருதுநகா் மாவட்டத்தில் மூடப்பட்ட 45 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. மேலும், மூடப்பட்ட 25 ஆலைகளைத் திறக்க வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் விரைவில் உத்தரவு வழங்குவா் என ஆலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT