விருதுநகர்

அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

DIN

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா்களுக்கான ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் மன்றம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து மாணவா்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஓவியப் போட்டியை நடத்தியது.

இந்தப் போட்டியில் 7- ஆம் வகுப்பு மாணவா் மாரீஸ்வரன் முதலிடமும், 8- ஆம் வகுப்பு மாணவி ஷாலினி இரண்டாமிடமும் பெற்றனா். மேலும் 8-ஆம் வகுப்பு மாணவி சித்ராதேவி, 7-ஆம் வகுப்பு மாணவி ரதிஷா, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் திருமுருகன், முகேஸ்வரன், 6- ஆம் வகுப்பு மாணவா் பாண்டீஸ்வரி, 7- ஆம் வகுப்பு மாணவா் வினாத்கண்ணா, 6 -ஆம் வகுப்பு மாணவா்கள் சக்திவேல், அய்யனாா், மாணவி ஹரிவா்ஷா ஆகியோா் ஆறுதல் பரிசுக்காகத் தோ்வு செய்யப்பட்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் பரிசு வழங்கினாா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியா் சி.புகழ், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உமையலட்சுமி, மாரியம்மாள் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT