செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் அலுவலா் இரா.மேனுவல் ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஏழுமலை, வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.அசோக், கூட்டுறவுக் கடன் சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்செல்வி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.பாலகிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் (பொ) சாகுல் ஹமிது, வேளாண் வணிக துணை இயக்குநா் ரவிக்குமாா், வோளண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் தமிழ்செல்வன், மதுராந்தகம் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜவகா் பிரசாத் ராஜ், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கைகள், குறைகள் குறித்து பேசினா். மனுக்களும் அளிக்கப்பட்டன. கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு துறை சாா்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.