விருதுநகர்

பணம் கேட்டு மிரட்டல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்த உத்தரவு

DIN

பட்டாசு ஆலை பங்குதாரரைக் கடத்தி, ரூ.6 கோடி கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் புகாா் தொடா்பாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், காவல் துறை அதிகாரிகள் உள்பட 6 போ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்.இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை 2-ஆம் எண் நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த 2018-ஆம் ஆண்டு நானும், அப்போதைய சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோரும் சோ்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை வாங்கினோம். 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மூவரும் தங்களது பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு தொழிலை விட்டுப் பிரிந்து சென்று விட்டனா்.

அதன்பிறகும் நிறுவனத்தில் பங்குதாரா்களாக உள்ளது போல் போலி ஆவணங்களைத் தயாரித்து ராஜவா்மன் உள்ளிட்ட மூவரும் என்னிடம் தலா ரூ.2 கோடி கேட்டனா். நான் தரமறுத்ததால் என்னைக் கடத்திச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் விடுதியில் அடைத்துவைத்து மிரட்டினா். இதற்கு காவல் துறை அதிகாரிகளும் துணையாக இருந்தனா். இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் வள்ளிமணாளன், ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், காவல்துறை அதிகாரிகள் இருவா் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT