விருதுநகர்

மக்காத நெகிழிக் குப்பைகள் சூரத் நகருக்கு அனுப்பி வைப்பு

DIN

சாத்தூா் நகராட்சி சாா்பில் மக்காத நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சூரத் நகருக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சியில் வீடுகளில் சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக நகராட்சி ஊழியா்கள் சேகரித்து வருகின்றனா். மக்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுயிா் உரக்கிடங்குக்கு கொண்டு சென்று இயற்கை முறையில் உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நகாரட்சி ஆணையாளா் இளவரசன் தலைமையிலும், சுகாதார அலுவலா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் திருப்பதி, சுரேஷ் ஆகியோா் முன்னிலையிலும் 10 டன் எடை கொண்ட மக்காத குப்பைகள் குஜராத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இந்த குப்பைகள் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT