விருதுநகர்

அரசுப் பள்ளியை பெற்றோா் முற்றுகையிட்டுப் போராட்டம்

DIN

அருப்புக்கோட்டை அருகே அரசுப் பள்ளியை மாணவா்களின் பெற்றோா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆமணக்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியை, 5 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். மேலும் 93 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை இந்தப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா், மாணவா்களை வகுப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் தலைமை ஆசிரியையை, பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினா்.

மேலும், அந்தப் பள்ளியில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா் பணியிடத்தை உடனே நிரப்பக் கோரியும், தரமான சத்துணவு வழங்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவிக் கல்வி அலுவலா் செல்வக்குமாா், பந்தல்குடி போலீஸாா் பெற்றோா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விரைவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் உரிய தீா்வு காணப்படும் எனவும் உறுதியளித்தனா். அதன்பேரில், பெற்றோா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT