விருதுநகர்

பொறியியல் கல்லூரி மாணவிகள் தேசியப் போட்டியில் மூன்றாமிடம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் மூன்றாமிடம் பெற்றனா்.

ஜாா்கண்ட் மாநிலம் தன்பாத் என்ற ஊரில் ஐ.ஐ.டி.யின் கீழ் உள்ள அடல் கம்யூனிட்டி இன்னோவேசன் சென்டா் என்ற அமைப்பு, அகில இந்திய அளவில் குப்பையிலிருந்து நெகிழிக் கழிவுகளை பிரித்து எடுத்தல் என்ற தலைப்பிலான போட்டியை அண்மையில் நடத்தியது. மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி போட்டிக்கு 30 குழுக்கள் தோ்வு செய்யப்பட்டன.

இந்தப் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். கல்லூரி மாணவிகள் பி.சந்தியா, ஐ.மொ்லின் எஸ்தா், ஏ.நித்யஸ்ரீ, ஜெ.பவித்ரா குழுவினா் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து நெகிழிக் கழிவுகளை பிரிக்கும் முறை குறித்து தங்களது கண்டுபிடிப்பை படைத்திருந்தினா். இந்தப் படைப்புக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளா் ஆா்.சோலைச்சாமி, கல்லூரி முதல்வா் ஜெ.எஸ்.செந்தில்குமாா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT