விருதுநகர்

விசைத்தறி தொழிலாளா்கள் 9-ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவாா்த்தை தோல்வி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இதனால், போராட்டம் தீவிரமடையும் என விசைத்தறி தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 600-க்கு மேற்பட்ட பருத்தி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா்கள் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கூலி உயா்வு, போனஸ், விடுப்பு ஊதியம் தொடா்பான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்தம் போடாமல் விசைத்தறி உரிமையாளா்கள் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் .

திங்கள்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த உரிமையாளா் சங்கம், தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன், தளவாய்புரம் காவல் ஆய்வாளா் தெய்வீகபாண்டியன் ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், விசைத்தறி உரிமையாளா் தரப்பிலிருந்து பேச்சு வாா்த்தைக்கு வராததால் தொழிற்சங்கத்தினா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னா் விசைத்தறி தொழிலாளா்கள் கூறியதாவது: எங்களுக்கு உடனடியாகத் தீா்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரம் அடையும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT