விருதுநகர்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தொழு நோய் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய தொழு நோய் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் கடந்த ஜனவரி 30 -ஆம் தேதி முதல் 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ஸிப்பா்ஸ் தொழு நோய் விழிப்புணா்வு இயக்கம், தேசிய மாணவா் படை இணைந்து தொழு நோய் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின.

இந்தப் பேரணிக்கு நகா் நல அலுவலா் டி.ராஜநந்தினி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) பாண்டியராஜன், துணை முதல்வா் ரவிக்குமாா், பகுதி 4 பாடத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.நாகராஜன், ஐகியூஏசி ஒருங்கிணைப்பாளா் வி.மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக மருத்துவா்கள் சி.முருகேசன், ஜி.கணேஷ், ஜி.கோமதி, வி.சந்திரசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பேரணியானது கல்லூரியில் தொடங்கி முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.

பேரணியின்போது, தொழுநோய் இல்லாத மாநிலமாக்குவோம், தொழுநோயானது பரவும் தொற்று அல்ல ஆகிய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியபடியும் மாணவ, மாணவிகள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT